பத்தாவது ஆண்டில் உச்சங்களை தொட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

Transnational Government of Tamil Eelam (TGTE)

பத்தாவது ஆண்டில் காலடி வைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், புதிய உச்சங்களை தொட்டு தனது அரசவை அமர்வினை கடந்த மே22,23ம் தேதிகளில் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது

NEW YORK, UNITED STATES OF AMERICA, June 3, 2020 /EINPresswire.com/ —

பத்தாவது ஆண்டில் காலடி வைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், புதிய உச்சங்களை தொட்டவாறு தனது அரசவை அமர்வினை கடந்த மே22,23ம் தேதிகளில் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.

2009, போரின் இறுதிக்கட்டத்தில் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற போராட்ட வடிவத்தின் ஊடாக ஜனநாயக வழியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவித்திருந்தனர். மதியுரைஞர் குழுவின் வழிகாட்டுதலுக்கு அமைய 2010ம் மே18ம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதலாவது அரசவையினைக் கூட்டி இற்றைக்கு பத்து ஆண்டுகளை தொட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அரசவை அமர்வினை நேரடியாக கூட்ட முடியாத நிலையில், இணையவழி தொழில்நுட்பத்தின் மூலம் கூட்டி, எத்தகைய சவாலான காலத்திலும் விடுதலைக்கான போராட்டம் முன்னெடுக்கப்படும் என்ற உறுதியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

* இந்த அமர்வின் தொடக்க நிகழ்வில் மத்திய தென்னமெரிக்க கயானா நாட்டு முன்னாள் அதிபர் Donald Ramotar அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு, ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கான தமது தேசத்தின் தோழமையினை வெளிப்படுத்தியிருந்தார்.

* முன்னராக மே18 தமிழீழத் தேசிய துக்க நாளின் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை கிழக்கு தீமோரின் முன்னாள் அதிபர் முனைவர் ஹொசே ரமோஸ்-ஹோர்தா அவர்கள் கலந்து கொண்டு, தமிழீழ விடுதலைப் போராட்டதுக்கான தனது தோழமையினை வெளிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் சிறப்பு பிரதிநிதிகளாக:

* Stephen J. Rapp (அமெரிக்க அரசாங்கத்தின் போர்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் சிறப்புத்தூதர் United States Ambassador-at-Large for War Crimes Issues )

* Arvin Boolell (மொறிசியஸ் நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித்தலைவர்)

* Professor David.L .Phillips ( அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழகம் (Director,Peace-building and Rights Program Institute for the study of Human Rights- Columbia University,) பங்கெடுத்திருந்தனர்

இவ்வாறு தனது பத்தாவது ஆண்டில் தனது கடந்த கால இராஜதந்திர செயற்பாட்டின் உச்சத்தினை வெளிப்பாடுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இடம்பெற்றிருந்தது.

மேற்சபை உறுப்பினர்களுக்கும், அரசவை உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்றிருந்த கூட்டு கருத்துபரிமாற்றத்தின் போது, பல்வேறு செயற்திட்டங்கள் உரையாடப்பட்டிருந்தன. இதில் குறிப்பாக தமிழர்களுக்கான உலகளாவிய வங்கி ஒன்றினை நிறுவுவது, கொரோனா வைரஸ் நெருக்கடியான நாடுகளுக்கு தமிழர்களின் தோழமையினை வெளிப்படுத்தும் வகையில் தமிழர் மருத்துவ குழுவினை அனுப்புவது என செயற்திட்டங்கள் இனங்காணப்பட்டிருந்தன.

உலக அரசியல் வெளியில் நாடுகடந்த அரசியல் (Transnational Politics) என்ற கோட்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த வந்த பாதை, அதன் எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு அமைச்சுக்களும் தமது செயற்பாட்டு அறிக்கையினை சமர்பித்திருந்ததோடு, அரசவை உறுப்பினர் பலரும் தமது கருத்துக்களையும் சபையில் முன்வைத்திருந்தனர்.

பல்வேறு அரசியல் பரிமாணங்களை கொண்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த முன்னெடுப்பினை இணைய ஊடகங்கள் ஊடாகவும், சமூகவலைத்தளங்கள் ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்ததோடு பலரும் தமது பாராட்டுதல்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தெரிவித்து வருகின்றனர்.

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter


Source: EIN Presswire